புதன், 14 செப்டம்பர், 2016

சபரி மலை செல்வது ஒரு யாகம்

சபரி மலை செல்வது ஒரு யாகம்

சபரி மலை செல்வது ஒரு யாகம்

சபரிமலைக்கு அய்யன் தரிசனத்தின் போகும் போது நெய் கொண்டு செல்வது ஏன்?

இருமுடியில் நெய் நிறைத்து நெய்த்தேங்காய் சுமந்து செல்வதற்கு
முன்று காரணங்கள் உள்ளன. முதல் இரண்டு காரணங்கள் புராண கதைகளை சார்ந்ததாகவும் , மூன்றாவது நமது வாழ்க்கையை  சார்த்துமாய் உள்ளன.

முதல் காரணம்: பந்தளராஜன் மனைவிக்கு தலைவலி ஏற்படுகிறது. உடனே புலிப்பாலால் தலைவலி தீரும் என பொய்க்காரணம் காட்டி ஐயப்பனை காட்டுக்கு அனுப்புகின்றனர். வளர்ப்புத் தந்தையான பந்தள மன்னன் மிக வருத்தத்துடன் மகனை வழியனுப்பும் போது, காட்டில் உண்பதற்காக பல நாட்கள் கெட்டுப்போகாமல் இருப்பதற்காக நெய்யில் தயாரித்த சில உணவு வகைகளை ஒரு முடியாகக் கட்டினான். அதே சமயம், சிவபக்தனான பந்தள மன்னன், முக்கண்ணனான சிவனின் அம்சம்போல் ஒரு தேங்காயை மற்றொரு முடியில் வைத்துக் கொடுத்தான். அந்த இருமுடிகளையும் இணைத்து திருமுடிமேல் ஏந்திய சிறுவன் மணிகண்டன், புலிப்பால் கொண்டுவர காட்டுக்குச் சென்றான். இருமுடியை முதன்முதலில் தலையில் ஏற்றியது ஸ்ரீஐயப்பன் என்று புராணம் கூறுகிறது. இவ்வாறு ஐயப்பன் செய்தது போலவே, இருமுடியை தலையில் தாங்கி ஐயப்பனை வழிபடும் முறையாக அதுமாறி, நாளடைவில் நிலைத்தும்விட்டது.

இரண்டாவது காரணம்: ஐயப்பனின் வளர்ப்புத் தந்தை பந்தளமகாராஜா ராஜசேகரன் ஐயப்பனை விட்டு பிரிந்து செல்லும் காலம் வந்தது. ஐயப்பன் பிரியும் நேரத்தில் மணிகண்டா, நீ காட்டுக்குள் குடியிருக்கப் போவதாய் சொல்கிறாய். அங்கே மலைகளைக் கடந்து வரவேண்டும். அவை சாதாரண மலையல்ல. வயதான நான் உன்னைக் காண எப்படி வருவேன் என்றார். அதற்கு மணிகண்டன் உங்களுக்கு ஒரு கருடன் வழிகாட்டும். அந்த வழிகாட்டுதலின்படி நீங்கள் எனது இடத்திற்கு வந்து விடலாம் என அருள்பாலித்தார். அதன்படி ஆண்டுக்கு ஒருமுறை ஐயப்பனைக் காண பந்தளராஜா மலைக்குச் செல்வார்.மகனை வெறுங்கையோடா பார்க்கச் செல்ல முடியும். அவனுக்கு பிடித்தமானவற்றை எல்லாம் எடுத்துச் செல்ல வேண்டாமா? என்ன கொண்டு செல்வது என யோசித்தார். நெய் இலகுவில் கெட்டு போகாத ஒன்று.

எனவே நெய்யில் செய்த பலகாரங்களை கொண்டு செல்வார். மேலும் தனி நெய்யை தேங்காய்க்குள் ஊற்றி கொண்டு சென்றால் இன்னும் பல நாள் கெடாமல் இருக்கும். ஐயப்பனைக் காணச் செல்வதென்றால் எளிதான காரியமா? பந்தளத்திலிருந்து நடந்தே மலை ஏறுவார். மலையை அடைய பல நாட்களாகும்.எனவே கெட்டுப் போகாத நெய்யை எடுத்துச் செல்லும் வழக்கம் உருவானது. இருமுடிகட்டில் முக்கியமானது நெய் தேங்காய்தான். அத்துடன் ஐயப்பன் அரண்மனையில் இருந்த போது அணிந்த நகைகளையும் எடுத்துச் சென்ற பழக்கம் நாளடைவில் உருவானது. அது இப்போது பெரும் விமர்சையாகக் கொண்டாடப்படுகிறது. அன்று கருடன் வழிகாட்டுவது விசேஷ அம்சம். வயதான அவர் மலை ஏற முடியாமல் ஐயோ அப்பா என்று சொல்லியபடியே பல இடங்களில் உட்கார்ந்தும் விடுவார். இந்தச் சொற்களே திரிந்து ஐயப்பன் என ஆனதாகவும் சொல்லப்படுவதுண்டு.

மூன்றாவது முக்கிய காரணம், தேங்காய் மற்றும் ஓடு  என்பது நமது உடல். தேங்காயில் நார் எல்லாம் நமது நாடி நரம்புகளால் சூழ பட்டது. தேங்காயின் உள்ளே உள்ள வெள்ளை பகுதி நமது சதை பகுதி, நமது உடல் முழுவதும் நீர்  மற்றும் இரத்தம்நிரம்பி உள்ளது அது தான் இளநீர். நமக்கு இருப்பது போல்  தேங்காயின்  வெளியே இரண்டு கண்கள் உள்ளன. மூன்றாவது கண் தான் ஞான கண். நெய் நிறைப்பதற்கு முன் தேங்காயின் மூன்றாவது கண் ஆன ஞான கண் திறக்கபட்டு அதன் உள்ளே உள்ள இளநீர் வெளியே எடுக்கபட்டு, பிறகு நமது ஆன்மாவை நெய்யாக உறுக்கி, மூன்றாவது கண் ஆன ஞான கண் வழியாக நமது
துயமான ஆத்மாவை நெய் வடிவில் உருக்கி நீரைக்கப்படுகின்றது. சபரிமலை சென்று அடைந்த பிறகு குருசுவாமி துணை கொண்டு அந்த தேங்காயை இரு பாகமாக உடைக்கப்பட்டு , அதாவது நமது ஆணவம், அகம்பாவம் எல்லா வற்றையும் உடைத்து,நெய்யை  மட்டும் வெளியே எடுத்து, அந்த பரிசுத்தமான நமது ஆன்மா வடிவிலான நெய்யை  சரணாகத வத்சலனான சபரிகிரி வாசனுக்கு அபிஷேகம் செய்ய படுகின்றது. நமது ஆன்மாவே இறைவனிடம் சேர்த்த பின் நமது உடல் உயிர் இல்லாத பிணம். அதை உணர்த்த தான் தேங்காய் இரண்டு பாகத்தையும் தீயில் இடுகின்றோம்.

 எத்தனை முறை சபரிமலை சென்றோம் என்பது முக்கியமில்லை. ஒவ்வொரு வருடம் சபரிமலை சென்று நாம் எந்த அளவிற்கு, நமது வாழக்கையை செம்மை படுத்தி உள்ளோம் என்பதே முக்கியம். எல்லோரும் செல்கின்றனர் நாமும் செல்வோம் என்று செல்வதில் எந்த பயனும் இல்லை . சபரிமலை செல்வது ஒரு யாகம். மற்ற கோவில்களுக்கு செல்வது போல் செல்லக் கூடாது  நாம் எப்படி ஒழுக்கத்துடன் அய்யனை தரிசனம் செய்ய நம்மை ஆயத்தபடுத்தி உள்ளோம் என்பதே மிகவும் முக்கியம். எத்தனை முறை சந்நிதியில் அய்யனை தரிசனம் செய்தோம் என்பது முக்கியம் அல்ல அய்யன் நம்மை ஒருமுறை பார்த்தானா என்பது தான் முக்கியம்.

தற்காலத்தில் சபரிமலை செல்வது ஒரு உல்லாச பயணமாகி விட்டது. அப்படி செல்லாமல், அசைக்க முடியாத மனம் ஒருநிலை படுத்திய தூய பக்தியுடன் சபரிமலை செல்வோம் வாழ்வில் பல நன்மைகளை அவன் அருளாலே அடைவோம்.

சரணாகத வத்சலனே சரணம் ஐயப்பா.

அர்ஜூனனுக்கு முதலில் கடினமான

1. அர்ஜூனனுக்கு முதலில் கடினமான

1. அர்ஜூனனுக்கு முதலில் கடினமான
சொற்களின் மூலம் அறிவுறுத்த எண்ணினார் பகவான் கிருஷ்ணர்.
"உனக்கு என்ன ஆகி விட்டது இப்பொழுது? இந்த எண்ணம் தவறான நேரத்தில் உனக்கு எப்படி வந்தது?
அனைவரும் நீ போர்க்களத்தில் இருந்து புறமுதுகிட்டு ஓடி விட்டாயென சொல்லுவர். அதனால் உனக்கு பேரிழுக்கு ஏற்படும்.
2. இவ் வார்த்தைகள் அர்ஜுனனை போரிட தயார் படுத்தவில்லை.
ஆதலால் இந்த உடல் மற்றும் ஆன்மாவின் இயல்பை அர்ஜுனனுக்கு
விளக்க ஆரம்பித்தார் பகவான் கிருஷ்ணர்.
3. நமது உண்மையான இயல்பு ஆன்மாவே - உடல் அல்ல. இந்த
உடல் தற்காலிகமானது அழியக்கூடியது
ஆனால் ஆன்மா நிரந்தரமானது,
அழிக்கமுடியாதது. ஆதலால் இவ்வுடலில் இறப்பிற்கு துக்கப்பட
வேண்டியதில்லை. ஏனெனில் நமது ஆன்மா இறப்பதில்லை.
4. இது ஞான யோகத்தின் கண்ணோட்டம். கர்ம யோகத்தின் பார்வையிலும் நாம் நமது கடமையை
செய்ய வேண்டும். ஒரு வீரனின் கடமை போர் செய்வது. நியாயமான
மக்களை காப்பது. எவன் ஒருவன் தனது கடமையை செவ்வனே செய்து அதன் பலனை பரிபூரணமாக எனக்கு
அர்ப்பணிக்கிறானோ அவனுக்கு அதனால் எந்த பாவமோ பந்தமோ
ஏற்படுவதில்லை.
5. சமநோக்குடன் இப்போரில் பங்கேற்கும் கடமையை செய். உன்னத
நிலையை அவ்வாறே அடைவாய்.
சீரான மனநிலை உடையவர்கள் வழியும் அதுவே.
6. இந்த சீரான மனநிலை உடையவர்களை எப்படி அடையாளம்
கண்டு கொள்வது என்று தெரிந்து கொள்ள அர்ஜூனன் ஆவல் கொண்டான்
7. பகவான் கிருஷ்ணர் அத்தகைய
மனிதரிடம் நான்கு குணங்களை சுட்டிக்காட்டினார். முதன்மையானது
- அவர் தன் மனதின் ஆசைகளை துறந்து, எந்நேரமும் தன் ஆத்மாவுடன் இணைந்து மகிழ்ச்சியாக இருக்கிறார்.
8. இரண்டாவதாக அவர் கோபம், தாபம், பயம் முதலியவற்றில் இருந்து விடுபட்டு சுகத்திலும் துக்கத்திலும்
சமமாக வாழ்கிறார்.. , தன் உணர்வுகளை
அதைத் தூண்டும் பொருள்களில் இருந்து காத்துக்கொள்ள , ஆபத்தின்
அறிகுறி தெரியும் போதே சுதாரிக்கும்
ஆமையைப் போல பின் வாங்கிக்கொள்கிறார்.

ஸ்ரீவேங்கடேச சுப்ரபாதம் பற்றிய சில ஆன்மீக தகவல்கள்

ஸ்ரீவேங்கடேச சுப்ரபாதம் பற்றிய சில ஆன்மீக தகவல்கள்

ஸ்ரீவேங்கடேச சுப்ரபாதம் பற்றிய சில ஆன்மீக தகவல்கள் தினம்தோறும் ஸ்ரீவேங்கடேசஸ்ரீவேங்கடேசஅதிகாலையில் திருப்பதி-திருமலையில் நடை திறக்கும் போது பதிவு செய்யப்பட்ட ஸ்ரீவேங்கடேச சுப்ரபாதத்தை இசைக்க விடுகிறார்கள் தேவஸ்தானத்தார்.இந்த வேளையில் நடைபெறும் தரிசனத்துக்கு, ‘சுப்ரபாத தரிசனம்’ அல்லது ‘விஸ்வரூப தரிசனம்’ என்று பெயர். சுமார் 200-லிருந்து 250 பக்தர்கள் வரை இந்த தரிசனத்துக்கு அனுமதி உண்டு. இதற்கான முன்பதிவை, ஆன்லைனிலும் நேரடியாகவும் பதிவு செய்து கொள்ளலாம்.‘சுப்ரபாத சேவை’ தரிசனம் அரை மணி நேரம் மட்டுமே. இந்த சேவையின் முடிவில், வாத்திய முழக்கங்களுடன் ஸ்ரீவேங்கடவனின்கருவறைக்கு முன்னால் உள்ள தங்கக் கதவுகள் திறக்கப்படும். திருமலா ஸ்ரீமடத்தின் ராமானுஜ ஜீயர் கற்பூரத்தை ஏற்றி கருவறையில் இருக்கும் பிரதான அர்ச்சகரிடம் தருவார். அவர் அதை வாங்கி, மூலவர்ஸ்ரீவேங்கடாசலபதிக்கு ஸ்ரீமந் நாராயணனின் திருநாமங்களை ராகத்துடன் சொல்லி ஆரத்தி செய்வார்.மார்கழி மாதம் மட்டும், திருமலை - திருப்பதியில் பெருமாள் சன்னிதானத்தில் சுப்ரபாதம் ஒலிப்பதில்லை. காரணம் - அந்த ஒரு மாதம் மட்டும் சுப்ரபாதத்துக்குப் பதிலாக ஆண்டாளின் திருப்பாவைபாடப்படுகிறது.பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராச்சாரியார்இந்த ஸ்ரீவேங்கடேச சுப்ரபாதம், பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராச்சாரியார் எனும் வைணவப் பெரியவரால் எழுதப்பட்டது. ஐநூறு வருடத்துக்கும் பழமையான மூல ஸ்லோகத்தை அடிப்படையாகக் கொண்டும், ஆழ்வார் பாசுரங்களின் கருத்துக்களை அடிப்படையாகக் கொண்டும், இந்த சுப்ரபாதத்தை இயற்றி இருக்கிறார் இந்தப் பெரியவர்.சுப்ரபாதத்தை இயற்றிய பெருமைக்கு மட்டும் அண்ணங்கராச்சாரியார் சொந்தமல்ல. அவரது குரலில்தான் ஸ்ரீவேங்கடேச சுப்ரபாதம் திருமலை திருச்சன்னிதியில் நீண்ட காலமாக ஒலிபரப்பப்பட்டுவந்தது.தினமும் சுப்ரபாத சேவை தொடங்கப்படும் வேளையில் அண்ணங்கராச்சாரியார் குரலில் ஆலயப் பகுதியில் சுப்ரபாதம் ஆங்காங்கே ஒலிக்கத் தொடங்கிவிடும். இதற்கென இவரது குரலில் சுப்ரபாதத்தைப் பதிவு செய்து வைத்திருந்து, அதை ஒலிபரப்புவது தேவஸ்தானத்தாரின் வழக்கம். அப்போதெல்லாம் சுப்ரபாத சேவைக்கு டிக்கெட் வாங்கி, பெருமாளின் விஸ்வரூப தரிசனத்துக்குக்காத்திருக்கும் பக்தர்கள், அண்ணங்கராச்சாரியாரின் குரலோடு இணைந்து மனம் உருகி சுப்ரபாதம் பாடுவது வழக்கம்.வைணவத் துறைக்கு எண்ணற்ற சேவைகள் புரிந்த இந்த வைணவ மேதை காஞ்சிபுரத்தில்வாழ்ந்தவர். ‘பிரதிவாதி பயங்கரம்’ என்பது இவரது பட்டப் பெயர். எதிராளியுடன் நடக்கும் வாதப் போரில், எதிர் அணியினருக்குப் பயங்கரமானவராக இருப்பவர் என்ற பொருளில் இந்தப் பட்டப் பெயர் இவருக்கு அமைந்தது. 1983, ஜூன் 21-ஆம் தேதி இவர் இவ்வுலக வாழ்வை நீத்தார்.இவருக்கு நான்கு மொழிகளில் புலமை உண்டு. வைணவர்களால் ஓர் ஆழ்வாராகவே மதித்துப் போற்றப்பட்டவர் இவர். தன் காலத்தில் 1,207 புத்தகங்கள் எழுதி இருக்கிறார் என்பது ஆச்சரிய மூட்டும் தகவல். ஒரே நேரத்தில் வலது கையால் தமிழிலும், இடது கையால் சம்ஸ்க்ருதத்திலும் எழுதும் வல்லமை இவருக்கே உரித்தான சிறப்பம்சம்.1975-லிருந்துதான் எம்.எஸ். சுப்புலட்சுமி அவர்களின் குரலில் திருமலையில் சுப்ரபாதம் ஒலிக்கத் தொடங்கியது. அதற்கு முன்வரை, பிரதிவாதி பயங்கரம் ஸ்வாமியின் குரலில்தான், சுப்ர பாதம் திருமலையில் ஒலித்துக் கொண்டிருந்தது.

திங்கள், 6 ஜூன், 2016

வெற்றிலை பரிகாரம்

மேஷம்:
வெற்றிலையில் மாம்பழம் வைத்து செவ்வாய் கிழமை முருகனை வழிபட்டு சாப்பிட துனபங்கள் அகலும்.
ரிஷபம்:
வெற்றிலையில் மிளகு வைத்து செவ்வாய் கிழமை ராகுவை வழிப்பட்டு சாப்பிட்டால் துன்பம் விலகும்.
மிதுனம்:
வெற்றிலையில் வாழைப்பழம் வைத்து புதன்கிழமை இஷ்ட தெய்வத்தை வழிபட்டு சாப்பிட்டால் துன்பம் விலகும்.
கடகம்:
வெற்றிலையில் மாதுளம்பழம் வைத்து வெள்ளிக் கிழமை காளி தெய்வத்தை வழிபட்டு சாப்பிட்டால் கஷடம் விலகும்.
சிம்மம்:
வெற்றிலையில் வாழைப்பழம் வைத்து வியாழக்கிழமை இஷ்ட தெய்வத்தை வழிபட்டு சாப்பிட்டால் கஷடம் விலகும்.
கன்னி:
வெற்றிலையில் மிளகு வைத்து வியாழக்கிழமை இஷ்ட தெய்வத்தை வழிபட்டு சாப்பிட்டால் துன்பம் தீரும்.
துலாம்:
வெற்றிலையில் கிராம்பு வைத்து வெள்ளிக்கிழமை இஷ்ட தெய்வத்தை வழிபட்டு சாப்பிட்டால் துன்பம் தீரும்.
விருச்சிகம்:
வெற்றிலையில் பேரிச்சம்பழம் வைத்து செவ்வாய் கிழமை இஷ்ட தெய்வத்தை வழிபட்டு சாப்பிட்டால் துயரம் தீரும்.
தனுசு:
வெற்றிலையில் கற்கண்டு வைத்து வியாழன்கிழமை இஷ்ட தெய்வத்தை வழிபட்டு சாப்பிட்டால் கவலை தீரும்.
மகரம்:
வெற்றிலையில் அச்சு வெல்லம் வைத்து சனிக்கிழமை காளி தெய்வத்தை வழிபட்டு சாப்பிட்டால் கவலை தீரும்.
கும்பம்:
வெற்றிலையில் நெய் வைத்து சனிகிழமை காளி தெய்வத்தை வழிபட்டு சாப்பிட்டால் கவலை தீரும்.
மீனம்:
வெற்றிலையில் சர்க்கரை வைத்து ஞாயிற்றுக்கிழமை இஷ்ட தெய்வத்தை வழிபட்டு சாப்பிட்டால் நோய் தீரும்.

புதன், 30 மார்ச், 2016

கருவறையில் அமைக்கப்படும் மூலவர் பற்றி காணலாம்

கருவறையில் அமைக்கப்படும் மூலவர் பற்றி காணலாம்

கருவறையில் அமைக்கப்படும் மூலவர் பற்றி காணலாம். மனிதனை இறைவனோடு தொடர்பு கொள்ளச் செய்வதே மூலவர் தான். மூலவருக்குரிய சிலையை விஞ்ஞான அடிப்படையில் வடிவமைக்க வேண்டும் என்பதை நம் முன்னோர்கள் தெளிவாக அறிந்திருந்தனர்.
இது தொடர்பான குறிப்புகளை அவர்கள் ரிக் வேதத்தில் எழுதி வைத்துள்ளனர். ஆலயங்களில் உள்ள மூலமூர்த்தி சிலா விக்கிரகம், சுதை மூர்த்தி, தாருக மூர்த்தி என்று மூன்று வகைப்படும், சிலா விக்கிரகங்கள் என்பவை கல் அல்லது உலோகத்தால் செய்யப்பட்டதாக இருக்கும். சுதை மூர்த்தி என்பது பலவித மூலிகை கலவைகளை சேர்த்து, அதனுடன் தேன், சுண்ணாம்பு கலந்து உருவாக்கப்பட்டதாக இருக்கும்.
தாருக மூர்த்தி என்பது மரத்தினால் செய்யப்பட்ட மூல அமைப்பாக இருக்கும். இத்தகைய மூலவர்களை தமிழ்நாடு முழுவதும் உள்ள பழமையான ஆலயங்களில் காணலாம். ஆனால் 99 சதவீத மூலவர் சிலைகள் கருங்கல்லில்தான் இருக்கும். ஆதிகாலத்தில் ஆலயங்கள் தோன்றும் முன்பே மூலவர்களை வடிவமைக்கும் கலையை தமிழர்கள் கற்றுக் கொண்டு விட்டனர்.
மலைக்காடுகளில் சுற்றித் திரிந்த அவர்களுக்கு எங்கு பார்த்தாலும் கருங்கற்களைத் தான் காண முடிந்தது. எத்தனை நாட்களுக்குத் தான் அந்த கற்களையே பார்த்துக் கொண்டிருக்க முடியும்? அந்த கற்களில் இறை வடிவங்களை செதுக்கத் தொடங்கினார்கள். அதன்பிறகு தான் கருங்கல்லில் பஞ்சபூதங்களும் இருக்கும் அறிவியல் உண்மையை அறிந்தனர்.
நிலம், நீர், நெருப்பு, ஆகாயம், காற்று – இந்த ஐந்தும் தான் பஞ்சபூதங்கள். ஒரு கல்லை மற்றொரு கல்லுடன் உராய்ந்தால் தீ வரும். எனவே தீ கருங்கல்லில் உள்ளது. கருங்கற்கள் பொடி, பொடியாக நொறுங்கும் போது மண்ணாக மாறுகிறது. இது நிலத்தை காட்டுகிறது. மலைக்காடுகளில் பார்த்தால் கல்லுக்குள் இருந்து தான் தண்ணீர் ஈரமாக கசிந்து வெளியில் வரும்.
ஆக கல்லுக்குள் தண்ணீரும் இருக்கிறது. கல்லுக்குள் தேரை உள்ளிட்ட உயிரினங்கள் வாழும். இதன் மூலம் கருங்கல்லில் ஆகாயமான வெற்றிடமும், சுவாசிக்க காற்றும் இருப்பது உறுதியாகிறது. இப்பிரபஞ்சத்தை காக்கும் கடவுளுக்குரிய மூலவர் சிலை, பஞ்சபூத சேர்க்கையோடு தொடர்பு கொண்டதாக இருத்தல் வேண்டும் என்று சிந்தித்த தமிழர்களுக்கு கருங்கல் ஒன்றே அவர்களின் தேர்வாக இருந்தது.
எனவே கருங்கற்களில் மூலவர் விக்கிரங்களை செய்தால், அவற்றில் மிக எளிதாக இறை சக்தியை ஏற்படுத்தி, அதன் மூலம் அலைகளை பெருக்க செய்து பயன்பெற முடியும் என்று கண்டுபிடிக்கப்பட்டது. இதனால் தான் கருவறைகளில் மூலவர் விக்கிரகங்கள் கல்லால் வடிவமைக்கப்பட்டவைகளாக அமைந்தன. அதே சமயத்தில் வீதி உலா செல்லும் உற்சவர் மூர்த்தியை பஞ்சலோகங்களால் செய்தனர்.
வெளி இடங்களில் உள்ள சக்தியை கிரஹித்து கொள்ள வேண்டும் என்ற நோக்கில் உற்சவர் சிலைகள் உலோகத்தில் செய்யப்பட்டன. நாளடைவில் மூல விக்கிரகங்களுக் குரிய கற்களை கண்டுபிடித்து தேர்வு செய்து, அதில் சிலை செய்து, அதற்கு இறை சக்தி ஏற்படுத்தும் நுட்பத்தையும், சூட்சமத்தையும் தமிழர்கள் தெரிந்து கொண்டனர்.
எனவே, ஆயிரம் ஆண்டுகள், இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முற்பட்ட ஆலயங்களில் உள்ள மூல விக்கிரகங்கள், சிற்ப சிறப்புகள் மட்டுமின்றி, அதன் பின்னணியில் இறை ஆற்றலை வாரி வழங்கும் தன்மைகளை நிரம்ப கொண்டுள்ளன என்பதை நாம் புரிந்து கொள்ள வேண்டும். எல்லா கருங்கல்லும் இறை ஆற்றலை வெளிப்படுத்தாது.
கருங்கல்லில் சூரிய காந்தக்கல், சந்திர காந்த கல், அலிக்கல் என்று மூன்று வகைகள் உள்ளன. சூரிய காந்த கற்கள் எப்போதும் சூடாக இருக்கும். இந்த வகை கல்லில் ஆக்ரோஷத்தை வெளிப்படுத்தும் கடவுள்களான சிவன், வீரபத்திரர், துர்க்கை, காளி போன்ற இறை வடிவங்களை செதுக்குவார்கள். சந்திரகாந்த கல் எப்போதும் குளிர்ச்சியாகவே இருக்கும்.
எனவே இந்த வகைக் கல்லில் பெருமாள், புத்தர், தட்சிணாமூர்த்தி போன்ற கடவுள்களின் வடிவங்களை செய்வார்கள். அலிக்கல் என்பது சூடாகவும் இருக்காது. குளிர்ச்சியாகவும் இருக்காது. கல்லைத் தட்டும் போது ஓசையும் வெளியில் வராது. இத்தகைய கற்களில் எந்த மூலவர் சிலையையும் செய்ய மாட்டார்கள். மூலவர்கள் சிலைகள் பொதுவாக நிற்கும் நிலை (ஸ்தானகம்) அமர்ந்திருப்பது (ஆசனம்) படுத்து இருப்பது (சயனக் கோலம்) என்று மூன்று வகையாக தயாரிப்பார்கள்.
இந்த மூவகை மூலவர்களை எவ்வளவு உயரம், எவ்வளவு அகலத்தில் படைக்க வேண்டும் என்பதற்கு சிற்ப சாஸ்திர விதிகள் உள்ளன. சிற்ப கலையில் நவதாலம் என்று ஒரு அமைப்பு உண்டு. இதன்படி மூலவர் சிலை முகத்தின் நீளத்தை போல 9 மடங்கு சிலையின் மொத்த உயரம் இருக்க வேண்டும் என்பது அந்த அமைப்புக்குரிய விதியாகும்.
இப்படி அனைத்து விதிகளுடன், சிற்பி தன் கைத் திறமையையும் காட்டும் போது தான் பிரமாதமான மூலவர் சிலை கிடைக்கும். அதற்காக கல்லே கடவுள் ஆகிவிடாது. கல்லிலும் கடவுள் இருக்கிறார் என்பதையே பிரபஞ்ச உண்மை நமக்கு காட்டுகிறது. பிறகு எப்படி கல் முழுமையான இறை சக்தியை பெறுகிறது என்று நீங்கள் யோசிக்கலாம்.
சிற்பி செதுக்கும் மூலவர் சிலையை பல வகையான தானியங்கள் ஒவ்வொன்றிலும் 48 நாட்கள் அதாவது ஒரு மண்டலம் வைப்பார்கள். தண்ணீருக்குள்ளும் அந்த சிலை ஒரு மண்டலம் வைக்கப்படும். இதன் மூலம் அந்த சிலை, காஸ்மிக் கதிர் சக்தி கொண்ட பிரபஞ்ச சக்தியை மிக, மிக எளிதாக பெற்று விடும்.
இதையடுத்து சிலைக்கு கண் திறக்கப்படும். இதற்கு சில நியதி உள்ளது. கண் திறக்க முதலில் ‘ரத்ன நியாசம்’ எனப்படும் ஆராதனை செய்வார்கள். பிறகு சிலையின் தலை, நெற்றி, கழுத்து, மார்பு, நாபி, கைகள், பாதங்களில் நவரத்தினங்களை வைத்து பூஜை செய்வார்கள். பால் நிவேதனம் செய்து தூப, தீப ஆராதனை காட்டுவார்கள்.
பின்னர் சிலைக்கு அபிஷேகம் செய்யப்படும். இதையடுத்து கலச பூஜை நடத்துவார்கள். கருவறையில் எந்த மூலவர் பிரதிஷ்டை செய்யப்பட உள்ளாரே அதற்கான மந்திரத்தை ஜெபித்து பூஜை செய்வார்கள். பின்னர் ஸ்தபதி விராட் விஸ்வ பிரம்மனை நினைத்துக் கொண்டு, தங்க ஊசி மூலம் சிலை கண்ணைத் திறப்பார்கள்.
முதலில் வலது கண்ணையும், பிறகு இடது கண்ணையும் திறக்க வேண்டும். சிலைக்கு கண்கள் திறக்கப்படும் போது ஸ்தபதியை தவிர வேறு யாரும் அருகில் இருக்கக் கூடாது. நான்கு புறமும் திரையிட்டு, திரை உள்ளேயே தீபம் காட்டி, பால், பழம், தேன் ஆகியவற்றை நிவேதனம் செய்ய வேண்டும். சிலைக்கு கண்கள் திறக்கப்பட்டதும், முதலில் கண்ணாடி, பசுவின் பின்பாகம், ஒற்றைப்படை எண்ணிக்கையிலான பெண்கள், நெற்கதிர்கள், நவதானியங்கள், சன்னியாசி, வேதவிற்பனர் என்ற வரிசையில் மூலவர் பார்வைபடும்படி செய்ய வேண்டும்.
இறுதியில் தான் பக்தர்கள் மூலவர் பார்வையில் படுதல் வேண்டும். ஆக கருவறையில் மூலவர் சிலையை நிலை நிறுத்துவதில் இவ்வளவு நியதிகள் உள்ளன என்பதை நினைவில் கொள்ள வேண்டும். மூலவர் சிலை பிரதிஷ்டை செய்யப்படுவதை நம் முன்னோர்கள் 4 வகையாக பிரித்து வைத்துள்ளனர். தேவர்கள் செய்யும் பிரதிஷ்டைக்கு தைவீகம் என்று பெயர்.
அசுரர்கள் பிரதிஷ்டை செய்தால் அதை அசுரம் என்பார்கள். ராஜாக்களும், பக்தர்களும் முயன்று மூலவரை பிரதிஷ்டை செய்தால் அதற்கு மானுஷம் என்று பெயர். ரிஷிகள் செய்யும் பிரதிஷ்டைக்கு ஆர்ஷம் என்று பெயர். இவற்றின் தத்தவத்தை உணர்ந்ததால்தான் ஆதிசங்கரர், ராமானுஜர், நால்வர், ஆழ்வார்கள், நாயன்மார்கள் மற்றும் ராமகிருஷ்ண பரமஹம்சர், விவேகானந்தர், வாரியார் போன்ற ஞானிகள் மூலவர் சிலையை கண்டதும் பரவசமாகி அங்கு இறை ஒளியை கண்டு சாமி தரிசனம் செய்தனர்.
இது புரியாமல் கல்லை வழிபடுபவர்கள் மூடர்கள் என்று நாத்திகவாதிகள் சொல்கிறார்கள். அவர்கள் ஒன்றை மட்டும் புரிந்து கொள்ள வேண்டும். ‘‘பஞ்ச சுத்தி செய்து நின்னை விளங்கும் பராபரமே...’’–என்ற நம் முன்னோர் வாக்குக்கு ஏற்ப கருங்கல்லில் வடிவமைக்கப்பட்ட மூலவரை நாம் மனம் ஒன்றி வழிபட, வழிபட நமக்குள் ஞானம் விஞ்சும் என்பதை மறந்து விடக்கூடாது.

கடும் குடும்ப பிரச்சினைகள் அகல

கடும் குடும்ப பிரச்சினைகள் அகல

கடும் குடும்ப பிரச்சினைகள் அகல

கடும் குடும்ப பிரச்சினைகள் அகல;

உங்கள் ஊர் அல்லது அருகாமையில்  பெருமாள் கோவிலில் உள்ள ஸ்ரீ லட்சுமி நரசிம்மருக்கு சனிக்கிழமைகளில் நெய்தீபம் ஏற்றி வழிபட பாதிப்பு நீங்கும்.

"ஓம் வஜ்ர நாகாய வித்மஹே
தீஷ்ண தம்ஷ்டராய தீமஹி
தந்நோ லக்ஷ்மிநரசிம்ம ஹ ப்ரசோதயாத்...

வீட்டில் தரித்திரத்தை தவிர்க்க, செல்வம் நிலைக்க

வீட்டில் தரித்திரத்தை தவிர்க்க, செல்வம் நிலைக்க

வீட்டில் தரித்திரத்தை தவிர்க்க, செல்வம் நிலைக்க !

ஒருவருக்கு பணம் கொடுக்க வேண்டுமென்றால் வாசல்படியில் நின்று கொண்டு கொடுக்கக் கூடாது. கொடுப்பவரும், வாங்குபவரும் வாசல் படிக்கு உள்ளே இருந்து கொடுக்கஃவாங்க வேண்டும்.

வாசற்படி, உரல், ஆட்டுக்கல், அம்மி இவைகளில் உட்காரக்கூடாது.

வெற்றிலை, வாழையிலை இவைகளை வாடவிடக்கூடாது. வெற்றிலையை தரையில் வைக்கக்கூடாது.

எரியும் குத்துவிளக்கை தானாக அணையவிடக்கூடாது, ஊதியும் அணைக்ககூடாது. புஷ்பத்தினால் அணைக்கவேண்டும்.

வீட்டில் யாரையும் சனியனே என்று திட்டக்கூடாது. எழவு என்றும் கூறக்கூடாது.

அதிகமாகக் கிழிந்த துணிகளை உடுத்தக்கூடாது. துணிமணிகளை உடுத்திக்கொண்டே தைக்கக் கூடாது.

உப்பை தரையில் சிந்தக்கூடாது. அரிசியை கழுவும் போது, தரையில் சிந்தக்கூடாது.

உங்கள் வீடுகளில் லக்ஷ்மி கடாக்ஷம் தழைத்து செல்வம் பெருக:

இல்லந்தோறும், காலை வேளைகளில் வெங்கடேச சுப்ரபாதமும், மாலை வேளைகளில் விஷ்ணு சஹஸ்ரநாமமும் ஒழித்தால், அந்த வீடுகளில் செல்வச் செழிப்பு தாமாகவே வந்துவிடும்.

வீட்டில் நெல்லி மரம் இருந்தால் லக்ஷ்மி கடாக்க்ஷ்ம் பெருகும். விஷ்ணுவின் அம்சமாக நெல்லிமரம் திகழ்வதால், நெல்லி மரத்தில் மகாலக்ஷ்மி வாசம் செய்கிறாள். நெல்லிக்கனிக்கு ஹரிபலம் என்ற பெயரும் உண்டு. லட்சுமி குபேரருக்கு உரிய மரமாகவும் திகழ்கிறது நெல்லி. நெல்லிமரம் இருக்கும் வீட்டில் தெய்வீக அருள் நிறைந்திருக்கும். எவ்வித தீய சக்திகளும் அணுகமுடியாது. நெல்லிமரத்தடியில் கிடைக்கும் தண்ணீர் உவர் தன்மையில்லாமல் மிகவும் சுவையாக இருக்கும்.

சங்கு, நெல்லிக்காய், பசு சாணம், கோஜலம், தாமரைப்பூக்கள், சுத்தமான ஆடைகள் வீட்டில் இருப்பது சுபம். காலை எழுந்தவுடன் தனது உள்ளங்கைகள், பசு, கோவில் கோபுரம், இறைவனின் திருவுருவப்