புதன், 14 செப்டம்பர், 2016

தொழில் செழிக்க குபேர ராஜவஸ்ய மந்திரம்

தொழில் செழிக்க குபேர ராஜவஸ்ய மந்திரம்

தொழில் செழிக்க குபேர ராஜவஸ்ய மந்திரம்

ஓம் ஸ்ரீம் ஹ்ரீம் ஐம் குபேராய ஐஸ்வர்யாய குபேர ராஜாய சங்க ரூபாய வியாபார வ்ருத்திம் குரு குரு ஸ்வாஹா.

2. ஓம்க்லீம் ஸ்ரீம் குபேராய தனாகர்ஷணாய தனராஜாய மம வ்யாபார ஸ்தலே தனங்ருத்திம் குரு ஸ்வாஹா.

3. ஓம் ஸ்ரீ வர்ரீம் க்லீம் ஐம் ஓம் தனதான்யாய க்லீம் நமோ குபேர ராஜ யட்சேசாய அஸ்ய யஜமானஸ்ய வ்யாபார அனுகூலம் வர்தய வர்தய ஸ்வாஹா.

சுவர்ண ஆகர்ஷண பைரவர் அஷ்டகம்

சுவர்ண ஆகர்ஷண பைரவர் அஷ்டகம்

சுவர்ண ஆகர்ஷண பைரவர் அஷ்டகம்
:  இந்த ஸ்வர்ணாகர்ஷண பைரவ அஷ்டகம் தனச் செழிப்பைத் தருவது. வெள்ளிக்கிழமை, திங்கட்கிழமை இரண்டு நாட்களிலும், சந்தியா காலங்களில் படிப்பவர்கள் வாழ்க்கையில் வெற்றியையும், தன விருத்தியையும் அடைவார்கள்.

பவுர்ணமியன்று இரவு எட்டு மணிக்கு தீபத்தை ஏற்றி வைத்துக் கொண்டு பதினெட்டு தடவை பாராயணம் செய்ய வேண்டும். இவ்விதம் ஒன்பது பௌர்ணமி பாராயணம் செய்தால் கண்டிப்பாக தன லாபத்தை அடைவார்கள். நீண்ட நாட்களாக பிடித்துக் கொண்ட வறுமையிலிருந்து விடுபடுவார்கள். ஒன்பதாவது பவுர்ணமியன்று அவலில் பாயசம் செய்து நிவேதிக்கலாம்.

வசதிக்கும், வாய்ப்புக்கும் ஏற்ப நிவேதனப் பொருளைக் கூட்டிக் கொள்ளலாம். அளவற்ற கீர்த்தியையும் தனத்தையும் தரும் இந்த பவுர்ணமி பூஜையை விடாமல் செய்பவர்களுக்கு சந்தோஷம் நிரந்தரமாக இருக்கும்.

தனந்தரும் வயிரவன் தளிரடி பணிந்திடின்
 தளர்வுகள் தீர்ந்துவிடும்
 மனந் திறந்தவன் பதம் மலரிட்டு வாழ்த்திடின்
 மகிழ்வுகள் வந்து விடும்
 சினந்தவிர்த் தன்னையின் சின்மயப்புன்னகை
 சிந்தையில் ஏற்றவனே
 தனக்கிலை யீடு யாருமே என்பான்
 தனமழை பெய்திடுவான்

 வாழ்வினில் வளந்தர வையகம் நடந்தான்
 வாரியே வழங்கிடுவான்
 தாழ்வுகள் தீர்ந்திட தளர்வுகள் மறைந்திட
 தானென வந்திடுவான்
 காழ்ப்புகள் தீர்த்தான் கானகம் நின்றான்
 காவலாய் வந்திடுவான்
 தனக்கிலை யீடு யாருமே என்பான்
 தனமழை பெய்திடுவான்

 முழு நில வதனில் முறையொடு பூஜைகள்
 முடித்திட அருளிடுவான்
 உழுதவன் விதைப்பான் உடைமைகள் காப்பன்
 உயர்வுறச் செய்திடுவான்
 முழுமலர்த் தாமரை மாலையை ஜெபித்து
 முடியினில் சூடிடுவான்
 தனக்கிலை யீடு யாருமே என்பான்
 தனமழை பெய்திடுவான்

 நான்மறை ஒதுவார் நடுவினில் இருப்பான்
 நான்முகன் நானென்பான்
 தேனினில் பழத்தைச் சேர்த்தவன் ருசிப்பான்
 தேவைகள் நிறைத்திடுவான்
 வான்மழை எனவே வளங்களைப் பொழிவான்
 வாழ்த்திட வாழ்த்திடுவான்
 தனக்கிலை யீடு யாருமே என்பான்
 தனமழை பெய்திடுவான்

 பூதங்கள் யாவும் தனக்குள்ளே வைப்பான்
 பூரணன் நான் என்பான்
 நாதங்கள் ஒலிக்கும் நால்வகை மணிகளை
 நாணினில் பூட்டிடுவான்
 காதங்கள் கடந்து கட்டிடும் மாயம்
 யாவையும் போக்கிடுவான்
 தனக்கிலை யீடு யாருமே
 என்பான் தனமழை பெய்திடுவான்

 பொழில்களில் மணப்பான் பூசைகள் ஏற்பான்
 பொன் குடம் ஏந்திடுவான்
 கழல்களில் தண்டை கைகளில் மணியணி
 கனகனாய் இருந்திடுவான்
 நிழல் தரும் கற்பகம் நினைத்திட பொழிந்திடும்
 நின்மலன் நானென்பான்
 தனக்கிலை யீடு யாருமே
 என்பான் தனமழை பெய்திடுவான்

 சதுர்முகன் ஆணவத் தலையினைக் கொய்தான்
 சத்தொடு சித்தானான்
 புதரினில் பாம்பைத் தலையினில் வைத்தான்
 புண்ணியம் செய்யென்றான்
 பதரினைக் குவித்து செம்பினை எரித்தான்
 பசும்பொன் இதுவென்றான்
 தனக்கிலை யீடு யாருமே என்பான்
 தனமழை பெய்திடுவான்

 ஜெய ஜெய வடுக நாதனே சரணம்
 வந்தருள் செய்திடுவாய்
 ஜெய ஜெய க்ஷத்திர பாலனே சரணம்
 ஜெயங்களைத் தந்திடுவாய்
 ஜெய ஜெய வயிரவா செகம் புகழ் தேவா
 செல்வங்கள் தந்திடுவாய்
 தனக்கிலை யீடு யாருமே என்பான்
 தனமழை பெய்திடுவான் :-

வேப்பமரத்தடி விநாயகர்

வேப்பமரத்தடி விநாயகர்

வேப்பமரத்தடி
விநாயகர்
வணக்கம் நண்பர்களே!

வேப்ப மரத்தடியில் எழுந்தருளியுள்ள ஸ்ரீவிநாயகப் பெருமானுக்கு உத்திரட்டாதி நட்சத்திரத்தில் பஞ்ச தீப என்னை எனப்படும் ஐந்து வித எண்ணை கொண்டு (தேங்காய் எண்ணை, நல்லெண்ணெய், பசு நெய்,
இலுப்பெண்ணை, விளக்கெண்ணை)  தீபம் ஏற்றி வழிபட்டு வந்தால்  மனதிற்கு ஏற்ற வரன் அமையும். ஏற்றுமது, இறக்குமதி வியாபாரம் செழிக்கும். அலுவலகத்தில் மேலதிகாரிகளுக்கு அடிமையாய் செயல்படும் நிலை அகலும். குடும்பத்தில் மைத்துனி, நாத்தனார், மாமியார் கொடுமைகள் தீரும்.

பாகற்காய் கலந்த உணவை தானம் செய்தல் உத்தம பலன்களைப் பெற்றுத் தரும். கிழக்கு நோக்கிய வேப்பமரத்தடி விநாயகர் மிகவும் சிறப்பு வாய்ந்தவர்.

நன்றி நண்பர்களே!

மாந்திரீக ரகசிய பரிகாரங்கள்

மாந்திரீக  ரகசிய பரிகாரங்கள்



1.விநாயகருக்கு சுண்டைக்காய் மலர் வைத்து வழிபட உடலில் உள்ள தீய சக்திகள் விலகி ஓடும் .

2.வெளியில் செல்லும் பொழுது எதிரில் பிணம் தென்பட்டாலோ அல்லது பிணம் எரிவதை தற்செயலாக பார்க்க நேரிட்டாலோ சில
நாணயங்களை > பூமியில் போட்டு விட்டு அவ்விடத்தை விட்டு செல்ல, அந்த ஆத்மவினால் ஏற்படும் எதிர் மறை விளைவுகள் ஏற்படாமல் இருக்கும்.

3.தினசரி வீட்டை விட்டு கிளம்புமுன் நீர் நிரம்பிய பாத்திரமோ அல்லது நீர் நிரம்பிய பக்கெட்/தொட்டி /குளம் பார்த்து செல்ல, போகிற விஷயம் சுபமாய் முடியும்.

4.கொடுத்த கடன் திரும்ப வரவில்லை எனில் உங்கள் இஷ்ட தெய்வத்திற்கு தினசரி 43 நாட்கள் நீல நிற பூவை வைத்து வேண்டி வர கடன் வசூலாக ஆரம்பிக்கும்.

5.அண்டை அயலார் மூலம் தொடர்ந்து தொல்லைகள் ஏற்பட்டால் தினசரி வீட்டு முன்
 மெழுகுவர்திகளை ஏற்றி வேண்டி வர தொல்லைகள் நீங்கும் .

6.எதிரிகள் தொல்லை மற்றும் சோதனைகள் அதிகமானால் வெள்ளிக்கிழமைகளில் உப்பு சேர்க்காமல் சாப்பிட்டு வர, எதிரிகள் நிலை செயல் இழந்து போகும்.

8. பசுவானது பால் கறக்கும் நிலையில் இருக்கும் போது தானம்
செய்வதுதான் மிக சிறந்த தானமாகும். பால் கறக்கும் பாத்திரமும் கொடுப்பது இன்னும் சிறப்பானது,பசுவுடன் காளையையும் சேர்த்து தானம் அளிப்பார்கள். இந்த தானம் கூடுதல் பலன் தருவதாகும்..

9.ஒரு பசு முதல் கன்று பிரசவித்ததும், அதை +தேனு+ என்பார்கள்.
{இரண்டாவது கன்று} பிரசவித்ததும் அதற்கு
கோ'' + என்றழைப்பார்கள். எனவே இரண்டாவது கன்று பிரசவித்த பசுவைத்தான் கோ பூஜைக்கு பயன்படுத்துவார்கள்,

* அகவே பசுவுக்கு தினமும் பூஜை செய்வது என்பது பராசக்திக்கு பூஜை செய்வதற்கு சமமாகும்...

10. முதல் ஆண் குழந்தையின் அரைஞாண் கயிற்றை பணப்பெட்டியில் வைக்க செல்வ வளம் சேரும்.

11. வசிய கட்டு ,தீய மைகள் , தீய வசிய ஏவல் போன்ற சக்திகள் ஒரு மனிதனுக்கு செய்யப்பட்டு இருந்தால் அவைகள் மழை நீரில் அல்லது கறந்த பசும்பாலில்(கறவை சூடாக) தலையில் நனைந்து விட்டால் அந்த சக்திகள் செயல் இழந்து போகும் ....

12. வலம்புரி சங்கினை தரையில் வைக்கக்கூடாது. சங்கிற்கு சந்தனம், குங்குமம் வைத்து பித்தளை அல்லது வெள்ளித்தாம்பாளத்தில் வைக்க வேண்டும். எவர்சில்வர் தட்டில் வைத்து வழிபடலாம்...

13. ஒவ்வொரு நாளும் சங்கில் தண்ணீர் விட்டு அதில் துளசி, வில்வக்கட்டை, ஏலக்காய், பச்சைக்கற்பூரம், குங்குமம், பூ சேர்த்து பூஜை செய்துவிட்டு அதில் சிறிது நீரைக்குடித்துவிட்டு, சிறிது நீரை வாசற்படியில் தெளிக்கவும்.

14.வலம்புரி சங்கு இருக்கும் வீட்டில் துர்தேவதைகள் நெருங்காது. மாமிச உணவருந்திய தினங்களிலும், பெண்கள் மாதவிலக்கான நாட்களிலும் வலம்புரிச் சங்கைத் தொடக்கூடாது என்பது குறிப்பிடத்தக்கது,.

சபரி மலை செல்வது ஒரு யாகம்

சபரி மலை செல்வது ஒரு யாகம்

சபரி மலை செல்வது ஒரு யாகம்

சபரிமலைக்கு அய்யன் தரிசனத்தின் போகும் போது நெய் கொண்டு செல்வது ஏன்?

இருமுடியில் நெய் நிறைத்து நெய்த்தேங்காய் சுமந்து செல்வதற்கு
முன்று காரணங்கள் உள்ளன. முதல் இரண்டு காரணங்கள் புராண கதைகளை சார்ந்ததாகவும் , மூன்றாவது நமது வாழ்க்கையை  சார்த்துமாய் உள்ளன.

முதல் காரணம்: பந்தளராஜன் மனைவிக்கு தலைவலி ஏற்படுகிறது. உடனே புலிப்பாலால் தலைவலி தீரும் என பொய்க்காரணம் காட்டி ஐயப்பனை காட்டுக்கு அனுப்புகின்றனர். வளர்ப்புத் தந்தையான பந்தள மன்னன் மிக வருத்தத்துடன் மகனை வழியனுப்பும் போது, காட்டில் உண்பதற்காக பல நாட்கள் கெட்டுப்போகாமல் இருப்பதற்காக நெய்யில் தயாரித்த சில உணவு வகைகளை ஒரு முடியாகக் கட்டினான். அதே சமயம், சிவபக்தனான பந்தள மன்னன், முக்கண்ணனான சிவனின் அம்சம்போல் ஒரு தேங்காயை மற்றொரு முடியில் வைத்துக் கொடுத்தான். அந்த இருமுடிகளையும் இணைத்து திருமுடிமேல் ஏந்திய சிறுவன் மணிகண்டன், புலிப்பால் கொண்டுவர காட்டுக்குச் சென்றான். இருமுடியை முதன்முதலில் தலையில் ஏற்றியது ஸ்ரீஐயப்பன் என்று புராணம் கூறுகிறது. இவ்வாறு ஐயப்பன் செய்தது போலவே, இருமுடியை தலையில் தாங்கி ஐயப்பனை வழிபடும் முறையாக அதுமாறி, நாளடைவில் நிலைத்தும்விட்டது.

இரண்டாவது காரணம்: ஐயப்பனின் வளர்ப்புத் தந்தை பந்தளமகாராஜா ராஜசேகரன் ஐயப்பனை விட்டு பிரிந்து செல்லும் காலம் வந்தது. ஐயப்பன் பிரியும் நேரத்தில் மணிகண்டா, நீ காட்டுக்குள் குடியிருக்கப் போவதாய் சொல்கிறாய். அங்கே மலைகளைக் கடந்து வரவேண்டும். அவை சாதாரண மலையல்ல. வயதான நான் உன்னைக் காண எப்படி வருவேன் என்றார். அதற்கு மணிகண்டன் உங்களுக்கு ஒரு கருடன் வழிகாட்டும். அந்த வழிகாட்டுதலின்படி நீங்கள் எனது இடத்திற்கு வந்து விடலாம் என அருள்பாலித்தார். அதன்படி ஆண்டுக்கு ஒருமுறை ஐயப்பனைக் காண பந்தளராஜா மலைக்குச் செல்வார்.மகனை வெறுங்கையோடா பார்க்கச் செல்ல முடியும். அவனுக்கு பிடித்தமானவற்றை எல்லாம் எடுத்துச் செல்ல வேண்டாமா? என்ன கொண்டு செல்வது என யோசித்தார். நெய் இலகுவில் கெட்டு போகாத ஒன்று.

எனவே நெய்யில் செய்த பலகாரங்களை கொண்டு செல்வார். மேலும் தனி நெய்யை தேங்காய்க்குள் ஊற்றி கொண்டு சென்றால் இன்னும் பல நாள் கெடாமல் இருக்கும். ஐயப்பனைக் காணச் செல்வதென்றால் எளிதான காரியமா? பந்தளத்திலிருந்து நடந்தே மலை ஏறுவார். மலையை அடைய பல நாட்களாகும்.எனவே கெட்டுப் போகாத நெய்யை எடுத்துச் செல்லும் வழக்கம் உருவானது. இருமுடிகட்டில் முக்கியமானது நெய் தேங்காய்தான். அத்துடன் ஐயப்பன் அரண்மனையில் இருந்த போது அணிந்த நகைகளையும் எடுத்துச் சென்ற பழக்கம் நாளடைவில் உருவானது. அது இப்போது பெரும் விமர்சையாகக் கொண்டாடப்படுகிறது. அன்று கருடன் வழிகாட்டுவது விசேஷ அம்சம். வயதான அவர் மலை ஏற முடியாமல் ஐயோ அப்பா என்று சொல்லியபடியே பல இடங்களில் உட்கார்ந்தும் விடுவார். இந்தச் சொற்களே திரிந்து ஐயப்பன் என ஆனதாகவும் சொல்லப்படுவதுண்டு.

மூன்றாவது முக்கிய காரணம், தேங்காய் மற்றும் ஓடு  என்பது நமது உடல். தேங்காயில் நார் எல்லாம் நமது நாடி நரம்புகளால் சூழ பட்டது. தேங்காயின் உள்ளே உள்ள வெள்ளை பகுதி நமது சதை பகுதி, நமது உடல் முழுவதும் நீர்  மற்றும் இரத்தம்நிரம்பி உள்ளது அது தான் இளநீர். நமக்கு இருப்பது போல்  தேங்காயின்  வெளியே இரண்டு கண்கள் உள்ளன. மூன்றாவது கண் தான் ஞான கண். நெய் நிறைப்பதற்கு முன் தேங்காயின் மூன்றாவது கண் ஆன ஞான கண் திறக்கபட்டு அதன் உள்ளே உள்ள இளநீர் வெளியே எடுக்கபட்டு, பிறகு நமது ஆன்மாவை நெய்யாக உறுக்கி, மூன்றாவது கண் ஆன ஞான கண் வழியாக நமது
துயமான ஆத்மாவை நெய் வடிவில் உருக்கி நீரைக்கப்படுகின்றது. சபரிமலை சென்று அடைந்த பிறகு குருசுவாமி துணை கொண்டு அந்த தேங்காயை இரு பாகமாக உடைக்கப்பட்டு , அதாவது நமது ஆணவம், அகம்பாவம் எல்லா வற்றையும் உடைத்து,நெய்யை  மட்டும் வெளியே எடுத்து, அந்த பரிசுத்தமான நமது ஆன்மா வடிவிலான நெய்யை  சரணாகத வத்சலனான சபரிகிரி வாசனுக்கு அபிஷேகம் செய்ய படுகின்றது. நமது ஆன்மாவே இறைவனிடம் சேர்த்த பின் நமது உடல் உயிர் இல்லாத பிணம். அதை உணர்த்த தான் தேங்காய் இரண்டு பாகத்தையும் தீயில் இடுகின்றோம்.

 எத்தனை முறை சபரிமலை சென்றோம் என்பது முக்கியமில்லை. ஒவ்வொரு வருடம் சபரிமலை சென்று நாம் எந்த அளவிற்கு, நமது வாழக்கையை செம்மை படுத்தி உள்ளோம் என்பதே முக்கியம். எல்லோரும் செல்கின்றனர் நாமும் செல்வோம் என்று செல்வதில் எந்த பயனும் இல்லை . சபரிமலை செல்வது ஒரு யாகம். மற்ற கோவில்களுக்கு செல்வது போல் செல்லக் கூடாது  நாம் எப்படி ஒழுக்கத்துடன் அய்யனை தரிசனம் செய்ய நம்மை ஆயத்தபடுத்தி உள்ளோம் என்பதே மிகவும் முக்கியம். எத்தனை முறை சந்நிதியில் அய்யனை தரிசனம் செய்தோம் என்பது முக்கியம் அல்ல அய்யன் நம்மை ஒருமுறை பார்த்தானா என்பது தான் முக்கியம்.

தற்காலத்தில் சபரிமலை செல்வது ஒரு உல்லாச பயணமாகி விட்டது. அப்படி செல்லாமல், அசைக்க முடியாத மனம் ஒருநிலை படுத்திய தூய பக்தியுடன் சபரிமலை செல்வோம் வாழ்வில் பல நன்மைகளை அவன் அருளாலே அடைவோம்.

சரணாகத வத்சலனே சரணம் ஐயப்பா.

அர்ஜூனனுக்கு முதலில் கடினமான

1. அர்ஜூனனுக்கு முதலில் கடினமான

1. அர்ஜூனனுக்கு முதலில் கடினமான
சொற்களின் மூலம் அறிவுறுத்த எண்ணினார் பகவான் கிருஷ்ணர்.
"உனக்கு என்ன ஆகி விட்டது இப்பொழுது? இந்த எண்ணம் தவறான நேரத்தில் உனக்கு எப்படி வந்தது?
அனைவரும் நீ போர்க்களத்தில் இருந்து புறமுதுகிட்டு ஓடி விட்டாயென சொல்லுவர். அதனால் உனக்கு பேரிழுக்கு ஏற்படும்.
2. இவ் வார்த்தைகள் அர்ஜுனனை போரிட தயார் படுத்தவில்லை.
ஆதலால் இந்த உடல் மற்றும் ஆன்மாவின் இயல்பை அர்ஜுனனுக்கு
விளக்க ஆரம்பித்தார் பகவான் கிருஷ்ணர்.
3. நமது உண்மையான இயல்பு ஆன்மாவே - உடல் அல்ல. இந்த
உடல் தற்காலிகமானது அழியக்கூடியது
ஆனால் ஆன்மா நிரந்தரமானது,
அழிக்கமுடியாதது. ஆதலால் இவ்வுடலில் இறப்பிற்கு துக்கப்பட
வேண்டியதில்லை. ஏனெனில் நமது ஆன்மா இறப்பதில்லை.
4. இது ஞான யோகத்தின் கண்ணோட்டம். கர்ம யோகத்தின் பார்வையிலும் நாம் நமது கடமையை
செய்ய வேண்டும். ஒரு வீரனின் கடமை போர் செய்வது. நியாயமான
மக்களை காப்பது. எவன் ஒருவன் தனது கடமையை செவ்வனே செய்து அதன் பலனை பரிபூரணமாக எனக்கு
அர்ப்பணிக்கிறானோ அவனுக்கு அதனால் எந்த பாவமோ பந்தமோ
ஏற்படுவதில்லை.
5. சமநோக்குடன் இப்போரில் பங்கேற்கும் கடமையை செய். உன்னத
நிலையை அவ்வாறே அடைவாய்.
சீரான மனநிலை உடையவர்கள் வழியும் அதுவே.
6. இந்த சீரான மனநிலை உடையவர்களை எப்படி அடையாளம்
கண்டு கொள்வது என்று தெரிந்து கொள்ள அர்ஜூனன் ஆவல் கொண்டான்
7. பகவான் கிருஷ்ணர் அத்தகைய
மனிதரிடம் நான்கு குணங்களை சுட்டிக்காட்டினார். முதன்மையானது
- அவர் தன் மனதின் ஆசைகளை துறந்து, எந்நேரமும் தன் ஆத்மாவுடன் இணைந்து மகிழ்ச்சியாக இருக்கிறார்.
8. இரண்டாவதாக அவர் கோபம், தாபம், பயம் முதலியவற்றில் இருந்து விடுபட்டு சுகத்திலும் துக்கத்திலும்
சமமாக வாழ்கிறார்.. , தன் உணர்வுகளை
அதைத் தூண்டும் பொருள்களில் இருந்து காத்துக்கொள்ள , ஆபத்தின்
அறிகுறி தெரியும் போதே சுதாரிக்கும்
ஆமையைப் போல பின் வாங்கிக்கொள்கிறார்.

ஸ்ரீவேங்கடேச சுப்ரபாதம் பற்றிய சில ஆன்மீக தகவல்கள்

ஸ்ரீவேங்கடேச சுப்ரபாதம் பற்றிய சில ஆன்மீக தகவல்கள்

ஸ்ரீவேங்கடேச சுப்ரபாதம் பற்றிய சில ஆன்மீக தகவல்கள் தினம்தோறும் ஸ்ரீவேங்கடேசஸ்ரீவேங்கடேசஅதிகாலையில் திருப்பதி-திருமலையில் நடை திறக்கும் போது பதிவு செய்யப்பட்ட ஸ்ரீவேங்கடேச சுப்ரபாதத்தை இசைக்க விடுகிறார்கள் தேவஸ்தானத்தார்.இந்த வேளையில் நடைபெறும் தரிசனத்துக்கு, ‘சுப்ரபாத தரிசனம்’ அல்லது ‘விஸ்வரூப தரிசனம்’ என்று பெயர். சுமார் 200-லிருந்து 250 பக்தர்கள் வரை இந்த தரிசனத்துக்கு அனுமதி உண்டு. இதற்கான முன்பதிவை, ஆன்லைனிலும் நேரடியாகவும் பதிவு செய்து கொள்ளலாம்.‘சுப்ரபாத சேவை’ தரிசனம் அரை மணி நேரம் மட்டுமே. இந்த சேவையின் முடிவில், வாத்திய முழக்கங்களுடன் ஸ்ரீவேங்கடவனின்கருவறைக்கு முன்னால் உள்ள தங்கக் கதவுகள் திறக்கப்படும். திருமலா ஸ்ரீமடத்தின் ராமானுஜ ஜீயர் கற்பூரத்தை ஏற்றி கருவறையில் இருக்கும் பிரதான அர்ச்சகரிடம் தருவார். அவர் அதை வாங்கி, மூலவர்ஸ்ரீவேங்கடாசலபதிக்கு ஸ்ரீமந் நாராயணனின் திருநாமங்களை ராகத்துடன் சொல்லி ஆரத்தி செய்வார்.மார்கழி மாதம் மட்டும், திருமலை - திருப்பதியில் பெருமாள் சன்னிதானத்தில் சுப்ரபாதம் ஒலிப்பதில்லை. காரணம் - அந்த ஒரு மாதம் மட்டும் சுப்ரபாதத்துக்குப் பதிலாக ஆண்டாளின் திருப்பாவைபாடப்படுகிறது.பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராச்சாரியார்இந்த ஸ்ரீவேங்கடேச சுப்ரபாதம், பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராச்சாரியார் எனும் வைணவப் பெரியவரால் எழுதப்பட்டது. ஐநூறு வருடத்துக்கும் பழமையான மூல ஸ்லோகத்தை அடிப்படையாகக் கொண்டும், ஆழ்வார் பாசுரங்களின் கருத்துக்களை அடிப்படையாகக் கொண்டும், இந்த சுப்ரபாதத்தை இயற்றி இருக்கிறார் இந்தப் பெரியவர்.சுப்ரபாதத்தை இயற்றிய பெருமைக்கு மட்டும் அண்ணங்கராச்சாரியார் சொந்தமல்ல. அவரது குரலில்தான் ஸ்ரீவேங்கடேச சுப்ரபாதம் திருமலை திருச்சன்னிதியில் நீண்ட காலமாக ஒலிபரப்பப்பட்டுவந்தது.தினமும் சுப்ரபாத சேவை தொடங்கப்படும் வேளையில் அண்ணங்கராச்சாரியார் குரலில் ஆலயப் பகுதியில் சுப்ரபாதம் ஆங்காங்கே ஒலிக்கத் தொடங்கிவிடும். இதற்கென இவரது குரலில் சுப்ரபாதத்தைப் பதிவு செய்து வைத்திருந்து, அதை ஒலிபரப்புவது தேவஸ்தானத்தாரின் வழக்கம். அப்போதெல்லாம் சுப்ரபாத சேவைக்கு டிக்கெட் வாங்கி, பெருமாளின் விஸ்வரூப தரிசனத்துக்குக்காத்திருக்கும் பக்தர்கள், அண்ணங்கராச்சாரியாரின் குரலோடு இணைந்து மனம் உருகி சுப்ரபாதம் பாடுவது வழக்கம்.வைணவத் துறைக்கு எண்ணற்ற சேவைகள் புரிந்த இந்த வைணவ மேதை காஞ்சிபுரத்தில்வாழ்ந்தவர். ‘பிரதிவாதி பயங்கரம்’ என்பது இவரது பட்டப் பெயர். எதிராளியுடன் நடக்கும் வாதப் போரில், எதிர் அணியினருக்குப் பயங்கரமானவராக இருப்பவர் என்ற பொருளில் இந்தப் பட்டப் பெயர் இவருக்கு அமைந்தது. 1983, ஜூன் 21-ஆம் தேதி இவர் இவ்வுலக வாழ்வை நீத்தார்.இவருக்கு நான்கு மொழிகளில் புலமை உண்டு. வைணவர்களால் ஓர் ஆழ்வாராகவே மதித்துப் போற்றப்பட்டவர் இவர். தன் காலத்தில் 1,207 புத்தகங்கள் எழுதி இருக்கிறார் என்பது ஆச்சரிய மூட்டும் தகவல். ஒரே நேரத்தில் வலது கையால் தமிழிலும், இடது கையால் சம்ஸ்க்ருதத்திலும் எழுதும் வல்லமை இவருக்கே உரித்தான சிறப்பம்சம்.1975-லிருந்துதான் எம்.எஸ். சுப்புலட்சுமி அவர்களின் குரலில் திருமலையில் சுப்ரபாதம் ஒலிக்கத் தொடங்கியது. அதற்கு முன்வரை, பிரதிவாதி பயங்கரம் ஸ்வாமியின் குரலில்தான், சுப்ர பாதம் திருமலையில் ஒலித்துக் கொண்டிருந்தது.